
காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா..??
நம் தினசரி வாழ்க்கையில் சாப்பிடும்போது ஒதுக்கி வைக்கும் ஒன்றுதான் கறிவேப்பிலை. இந்த கருவேப்பிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் ஏராளம். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு கருவேப்பிலை சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைகிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இதை பாலோ பண்ணுங்க. உணவில் சேர்க்கப்படும் கருவேப்பிலையை ஒதுக்கி வைக்காமல் தினமும் சாப்பிட்டாலே செரிமான பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை பேரிச்சம் பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும். முடி வளர்ச்சிக்கு கண்டிப்பாக கறிவேப்பிலையை இந்த மாதிரி சாப்பிட்டு வாங்க முடி வளர்ச்சி ஒரே மாதத்தில் உங்கள் கண்கூட தெரியும்.