
தலைமுறை தலைமுறையாக காலை எழுந்ததும் டீ அல்லது காபி குடிக்கும் வழக்கம் எல்லோருக்கும் உண்டு, அப்படி இருக்கும் பட்சத்தில் காபி குடிப்பதனால் நமது உடலில் ஏற்படும் தீமைகளை பற்றி யாரும் அறிவதே இல்லை, காலையில் எழுந்தவுடன் டீ காபி குடிப்பதை விட சுடுதண்ணீர் குடித்துவிட்டு அந்த நாளை தொடங்குவதனால் அன்றைய நாள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்..
மேலும் காலையில் தூங்கி எழுந்ததும் பலருக்கும் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும் ஆனால் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் உடலுக்கு நல்லதல்ல என்று உணவியால் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் காபியில் உள்ள டானிக் நெஞ்செரிச்சல் வாய்வு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று வயிற்றில் அமில சுரப்பை அதிகரிக்க செய்யும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர் இந்த நிலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்களும், மேலும் காபி குடிப்பதனால் செரிமான பிரச்சனை மற்றும் பித்தம் ஆகியவற்றை ஏற்படுத்தி குடலை அரிக்க செய்யும் என்று தெரியவந்துள்ளது, முடிந்தவரை காபி குடிக்கும் பழக்கத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது..!!