சில உணவுகள் நல்லது தான். ஆனால், அதை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, விஷமாக மாறலாம். பலர் காலையில் டீ மற்றும் காபி குடிப்பார்கள். காபியில் காஃபின் என்ற பொருள் உள்ளதாகவும், இது செரிமான அமைப்பை பாதித்து அமிலத்தன்மையை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. புளிப்பு நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, தக்காளி போன்றவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஏற்படும். எண்ணெயில் பொரித்த உணவான போண்டா, பஜ்ஜியை சாப்பிட்டால் வயிற்று வீக்கம் ஏற்படும். காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.