வெறும் 50 நாளில் 16 கிலோ எடை குறைத்த நடிகை ஆல்யா மானசா… ரகசியம் என்ன.? வைரலாகும் பதிவு..!!

பிரபல தனியார்  தொலைக்காட்சியான  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற “ராஜா ராணி” என்கின்ற சீரியலில் கார்த்திக் மற்றும் செம்பா ஆகிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.

இவர்கள் இருவரும் சீரியல் கணவன் மனைவியாக நடித்து வந்த நிலையில் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஐலா என்கின்ற ஒரு பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்து உள்ளது.

குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடியிருந்தார் ஆல்யா இந்நிலையில் தற்பொழுது தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறிவிட்டார். இது குறித்து நடிகை ஆல்யா கூறியது “நம்மால் உடல் எடையை குறைக்க முடியும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சுடு தண்ணீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மேலும் கடுமையான உடற்பயிற்சி, ரன்னிங், சுடுதண்ணீரில் சீரகம் கொதிக்க வைத்து குடிப்பது போன்ற செயல்களை தினமும் செய்யும்போது உடல் எடை கண்டிப்பாக குறையும்”, என்று ஆல்யா மானசா  கூறியுள்ளார்.

Read Previous

யூடியூபரின் நிர்வாண விடியோவை லீக் செய்த ஹேக்கர்கள்..!! ஹோம் டூர் வீடியோ பதிவிட்டவர்களே உஷார்.!!

Read Next

மை டியர் தல-யுடன் ஆக்சன் கிங் அர்ஜுன்..!! உற்சாகத்தில் தல ரசிகர்கள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular