வெற்றி என்பது தனிப்பட்ட நபரால் மட்டுமல்ல தனிப்பட்ட நபரின் திறமையால் பெரும் குழு வெற்றியடையும் உள்ளடக்கியதே. தனிப்பட்ட நபரின் முடிவுகளில் தன்னிச்சையாக செயல்பட்டு பெரும் தனி ஒருவரின் வெற்றியை விட ஒரு படி மேலானது குழு வெற்றி எனலாம். காரணம் குழுவின் அனைவரும் வெற்றிக்கு தரும் பங்களிப்பின் மூலம் வெற்றியாளர்கள் ஆகிறார்கள்…
எந்த குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை முழுமையாக உணர்ந்து இணைந்து திறமையாக செயல்படுகிறார்களோ அந்த அணிதான் வெற்றி பெறும் குழுவாகும். ஒரு அலுவலகத்தில் கூட்டு முயற்சியால் பல்வேறு பங்குகளை வாங்கி அதனை பெரிய அளவில் செயல்படுத்த முயன்றனர் ஆனால் அந்த அலுவலகத்தில் உள்ள சிலர் முதலில் ஒத்துழைக்கவில்லை பிறகு அலுவலகத்தின் செயல்களை பற்றி தெளிவாக எடுத்துரைத்த பிறகு அந்த குழு முழுமையாக ஒத்துழைத்து ஓராண்டு இறுதியில் பெரிய வெற்றியையும் மாற்றத்தையும் கொண்டுள்ளது எனவே ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்பதை விட ஒரு குழு சேர்ந்தால் அந்த வெற்றி இன்னும் சுலபமான முறையில் கிடைக்கும். மேலும் கூட்டு முயற்சி என்றும் வெற்றியைத் தரும் சரியான பார்வையாளர்களை தேர்ந்தெடுத்து நமது திட்டங்களை செயல்படுத்தும் பொழுது அத்திட்டங்கள் வெற்றி பெறும்..!!