
உங்களுக்கு தன்னம்பிக்கை வேண்டுமென்றால் உங்கள் நண்பரிடம் பேசுவது போல் உங்களிடமே பேசிக் கொள்ளுங்கள் விடாமுயற்சி வேண்டுமென்றால் ஒரு மாணவரிடம் பேசுவது போல் உங்களிடம் பேசிக் கொள்ளுங்கள். பொறுமை வேண்டுமென்றால் ஒரு குழந்தை இடம் பேசுவது போல் உங்களிடம் பேசிக் கொள்ளுங்கள் – ஜேம்ஸ் கிளியர்.
மேலே சொன்ன கருத்தில் எத்தனை உண்மை இருக்கிறது என்பதை கவனியுங்கள். நமது வலிமை நமக்குள் என்பதை அன்றே வலியுறுத்தி இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை விதையை விதைத்தார் விவேகானந்தர். அந்த ஊருக்கு சர்க்கஸ் ஒன்று வந்தது அந்த சர்க்கஸ் பிரபலமாவதற்கு காரணமே அதில் இருந்த கோமாளி ஒருவர் தான் என்ற செய்தி பரவியது வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தது முடிந்து போயிருந்த ராமனுக்கு அந்த கோமாளியை போய் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. சரி என்று சர்க்கஸ்க்கு நுழைவு சீட்டு வாங்கி உள்ளே சென்றார். நிகழ்ச்சி ஆரம்பமானது சொன்னது போல் முதலில் வந்தது கோமாளி தான் உருவத்தில் சிறியதாக இருந்த அந்த கோமாளி படபடவென்று நகைச்சுவையாக பேசி பொரிந்து தள்ளி குட்டிக்கரணம் அடித்தும் அந்த அரங்கமே கைத்தட்டி ஆரவாரம் இட்டது. ராமனும் கைதட்டி மகிழ்ந்தார் மற்ற நிகழ்ச்சிகள் தொடங்கியது கோமாளி வருவதும் செல்வமாக சர்க்கஸ் ஒரு வழியாக கோமாளி காட்டிய சந்தோஷத்துடன் நிறைவடைந்தது. ராமனுக்கு ஒரே வியப்பு ஏனெனில் அந்த கோமாளி ஒவ்வொரு முறை வரும்போதும் வெறும் நகைச்சுவை மட்டும் அல்லாமல் சிந்திக்க வைக்கும் கதைகளையும் சீரிய கருத்துக்களையும் இடையிடையே முளைத்து மக்களுக்கு நவரச தன்மையை தந்தது தான். எப்படியாவது கோமாளியை தனியே சந்தித்து பேச வேண்டும் என்று ராமன் தீர்மானித்தார். அன்று மாலை கோமாளியை போய் சந்தித்து பாராட்டியவர் எப்படி உங்களால் சிரிக்கவும் வைக்க முடிகிறது சிந்திக்கவும் வைக்க முடிகிறது இடைவிடாமல் உங்களால் எப்படி இப்படி இயங்க முடிகிறது என்று கேட்டார். அதற்கு கோமாளி சொன்ன பதில் இது என்ன கம்ப சூத்திரம் நான் எனக்குள் பேசிக்கொள்கிறேன் ஒவ்வொரு நிகழ்ச்சியின் துவக்கத்திலும் என் நண்பனிடம் பேசுவது போல் எனக்கு நானே பேசி எனக்குள் தன்னம்பிக்கை விதைத்துக் கொள்வேன். ஒரு குழந்தையை போல் பேசி எனக்குள் கோமாளித்தனத்தை வரவழைத்துக் கொள்வேன் எப்போதாவது விரதத்தை ஏற்பட்டால் அதை விரட்டி அடிக்க எனக்குள் நாளை பேசிக்கொண்டு உற்சாகமடைவேன் என்று கூறினார் ராமன் இவற்றை கண்டு வியந்து போய் தனது வாழ்க்கையில் இந்த தத்துவங்களை எடுத்துக் கொண்டார்..!!