
டாஸ்மாக் எலைட்டில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது. டாஸ்மாக் எலைட்டில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த செய்தி குடிமகன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர், ஒயின் உள்ளிட்ட மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே, அரசு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு பாட்டிலுக்கான விலையுடன் கூடுதலாக ஊழியர்கள் பணம் கேட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.