கணக்குப் போட்டு வாழும் வாழ்க்கை வெளிநாட்டு வாழ்க்கை…
இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் நான் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றிருந்தேன் காய்கறி வாங்குவதற்காக…
அப்போது நான் தக்காளியை எடுத்துக்கொண்டு இருந்தேன்
எனது அருகில் இன்னொருவரும் தக்காளியை எடுத்துக்கொண்டு இருந்தார்… அப்போது இன்னொருவர் அதாவது இந்த இரண்டு பேரும் ஒன்றாக சமைத்து சாப்பிடுகிறார் போல.. அவர் சொன்னார் கையில் கணக்கு போட்டு பார்த்தார் 14 தக்காளி மட்டும் எடு என்று தக்காளி எடுப்பவரிடம் சொன்னார்.. தக்காளியை எடுத்தவரும் 14 தக்காளி மட்டும் எடுத்தார்…
நான் அவரிடம் ஏன் எதற்காக 15 தக்காளி மட்டும் எடுக்க சொன்னீர்கள் என்று கேட்டேன் அதாவது அவர்கள் இரண்டு பேரும் இந்திக்காரர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தக்காளி தான் 7 நாளைக்கு 15 தக்காளி என்று சொன்னார்… சரி அப்படி என்றால் ஒரு தக்காளி மீதம் இருக்கிறது என்று கேட்டேன் ஒரு தக்காளி கெட்டுப் போய்விட்டால் என்ன செய்வது என்று சொன்னார்..
இதே போலத்தான் மாதமாதம் கணக்கு போட்டு வாழ்கின்றனர் நான் உள்பட..
வீட்டு செலவுக்கு இவ்வளவு அனுப்ப வேண்டும்… (அம்மாவுக்கு இவ்வளவு அனுப்ப வேண்டும்… பொண்டாட்டிக்கு தெரியக்கூடாது என்று அம்மாக்கு மட்டும் தனியாக அனுப்புகிறார்கள்…)
வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டும்.. மகனுக்கும் மகளுக்கும் காலேஜ் பீஸ் கட்ட வேண்டும்..
கடைக்குட்டி மகளுக்கு செல்வமகள் திட்டத்திற்காக மாதம் ஆயிரம் ரூபாய் போஸ்ட் ஆபீஸில் செலுத்த வேண்டும்…
எவ்வளவு உடம்பு வலிச்சாலும் வேலைக்கு போய் அங்கே போய் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள் ஏனென்றால் போகவில்லை என்றால் ஒரு நாள் சம்பளம் கட்டாகும்.
சரி வெள்ளிக்கிழமை ஒரு நாள் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்தால் இந்த கணக்கெல்லாம் கண் முன்னே வந்து போகும்…. பிறகு என்ன விடுமுறையும் கிடையாது எல்லா நாட்களும் வேலை நாட்கள் தான்.