
“துருவ நட்சத்திரம்” படத்தின் இரண்டாவது சிங்கிள் ஜூலை 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கௌதம் மேனன் இயக்கியுள்ள இப்படம் இதுவரை இல்லாத அளவில் தமிழில் ஒரு ஸ்டைலிஷான ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுவதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.