
தமிழ் சினிமா உலகில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “வணங்கான்”. இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயாதேவி ஆகிய பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் ப்ரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதை தொடர்ந்து டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த திரைப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மூலமாக அதிகளவில் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றது. மேலும் அருண் விஜய் செய்யாத கொலைக்காக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைகின்றனர் .மேலும் இந்த ட்ரெய்லரில் இறுதியில் படம் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.