
இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “சலாம்” இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இத்திரைப்படத்தில் டீசர் கடந்த ஜூலை 6-ம் தேதி அதிகாலை 5. 12 மணியளவில் வெளியிடப்பட்டதுரூ 200 கோடி பட்ஜெட்டில் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
“பாகுபலிக்கு” பின் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் வசூலை குவித்தாலும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை என்ற நிலை ஏற்பட்டு வந்தது. திரைப்படம் “கே. ஜி. எஃப்” போல நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் நடிகர்கள் பிரபாஸ், பிரிதிவிராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே ரூ 200 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் ஓ.டி.டி உரிமைகள் ரூ 200 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.