வெள்ளப்பெருக்கால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ரயில்.! சிக்கிக் கொண்ட 1000 பயணிகளின் நிலை என்ன..?

கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்க சுழற்சியின் காரணமாக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பேய் மழை பெய்து வருகிறது, வரலாறு காணாத இந்த பெரும் மழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டவாளங்களும் நீரில் மூழ்கியுள்ளதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பயணிகளுடன் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ரயில் வெள்ளம் நீர் காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று முதற்கட்டமாக ரயிலில் இருந்த 300 பயணிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாக்க பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் வழியில் உள்ள சாலை உடைந்ததால் மீதமுள்ள 500 பயணிகள் மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்ட தேவையான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ரயிலில் சிக்கி உள்ள பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநில, மத்திய அரசுகள் ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து ரயிலில் சிக்கி உள்ள பயணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாய் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் இன்று மீட்கப்பட்டு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

கண்மாய் சகதியில் சிக்கி 9 வயது சிறுவன் பரிதாப பலி..!! பெற்றோர்களே மழை நேரத்தில் கவனம்.!!

Read Next

எம்.எல்.ஏ பதவியை இழந்தார் திமுக அமைச்சர் பொன்முடி; ஆட்சியில் குவித்த சொத்தால், அதிகாரத்தில் இருந்தபோதே ஆப்பு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular