
பொதுவாகவே வாழ்வில் எல்லா விடயங்களுக்கும் பணம் மிகவும் இன்றியமையாததாகும். இந்து சாஸ்திரத்தின் பிரகாரம் வெள்ளிக்கிழமையானது பணத்தின் கடவுளான லட்சுமி தேவிக்கு உரிய தினமாக பார்க்கப்படுகின்றது.
எனவே வெள்ளி கிழமைகளில் குறிப்பிட்ட சில விடயங்களை செய்வதால் லட்சமி தேவியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் இதனால் நிதி ரீதியில் அசுப பலன்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.
அந்தவகையில் சாஸ்திரங்களின் பிரகாரம் வெள்ளிக்கிழமை நாட்களில் தவறியும் செய்யக்கூடாத விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமையில் செய்ய கூடாதவை
சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமைகளில் ஒருபோதும் லட்சுமி தேவியின் சிலையை கழுவி சுத்தம் செய்ய கூடாது.
இவ்வாறு செய்வது லட்சுமியை வீட்டில் இருந்து வெளியேற்றுவற்கு வழிகோலும். அதனால் நிதி விடயங்களில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.எனவே லட்சுமி தேவியின் சிலையை வெள்ளிக்கிழமைகளில் தவறியும் கழுவாதீர்கள்.
வெள்ளிக்கிழமை நாட்களில் மாலை நேரத்தில் லட்சுமி தேவி வீடு வீடாக சென்று பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.
எனவே வெள்ளிகிழமைகளில் மாலை வேளையில் தவறியும் கதவை மூடி வைக்கவே கூடாது. இவ்வாறு செய்தால் லட்சுமி தேவி வீட்டிற்குள் வராமல், வாசலோடு திரும்பிவிடுவார் என நம்பப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை நாட்களில் கடன் வாங்கவதையோ மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதையோ தவிர்த்துக்கொள்ள வேண்டும். இது லட்சுமியின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைப்பதை முற்றிலும் தடுத்து விடுகின்றது. பணப்பிரச்சினைகள் இருக்க கூடாது என்றால் இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.
குறிப்பாக வெள்ளிக்கிழமை நாட்களில் யாரேனும் உதவி என்று கேட்டு வந்தால் ,அவருக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் அது தானமாக இருக்க வேண்டுமே தவிர கடனாக கொடுக்கவே கூடாது. காரணம் இந்நாளில் கடன் கொடுத்தால் பாரிய பணப்பிரச்சிகைள் ஏற்படும் என்பது நம்பிக்கை.
வீட்டில் இருக்கும் பெண்கள் லட்சுமி தேவியின் மறுவடிவமாக பார்க்கப்படுகின்றார்கள். எனவே இந்த நாளில் பெண்களை அழ வைப்பது, திட்டுவது மற்றும் அவமதிப்பது போன்ற விடயங்களை ஆண்களும் சரி பெண்களும் சரி ஒருபோதும் பண்ணவே கூடாது.
இது லட்சுமி தேவியின் கோபத்தை தூண்டும் அதனால் பணகஷ்டம் ஏற்படுத்துவதுடன் லட்சுமியின் ஆசி வாழ்வில் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.
வீட்டில் மனைவியை மதிக்கும் அன்பாக நடத்தும் ஆண்களின் கையில் ஒருபோதும் பணத்துக்கு பஞ்சமே ஏற்படாது. பெண்கள் மனதை நோகடிப்போருக்கு லட்மியின் ஆசீர்வாதம் கிடைக்காது. இவர்கள் வாழ்வில் நிதி ரீதியில் செழிப்படையவே மாட்டா்கள்.
மேலும் வெள்ளிக்கிழமை நாட்களின் உப்பு, மஞ்சள் போன்றவற்றை யாருக்கும் கொடுக்கவே கூடாது. இவற்றில் லட்சுமி தேவி வசிக்கின்றார் என்பது ஐதீகம்.
எனவே லட்சுமிக்கு உகந்த தினத்தில் இவற்றை மற்றவர்களுக்கு வழங்குவது லட்சுமியை புறக்கணிப்பதற்கு ஒப்பாகும்.அவ்வாறு செய்வதால் பணப்புலக்கம் குறைய ஆரம்பிக்கும்.