பெண்களாகப் பிறந்தாலே பருவம் அடையும் சில நாட்களுக்கு முன்பில் இருந்து வெள்ளைப்படுதல் ஆரம்பித்து விடுகிறது, அன்றிலிருந்து முதுமை அடையும் வரை வெள்ளைப்படுதல் என்பது பெண்களுக்கு தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது, ஆனால் அந்த வெள்ளைப்படுதலின் அளவுத்தன்மை அதிகரிக்கும் பொழுது பெண்ணின் உடலை உருக்கி விடுகிறது இதனால் பெண்களுக்கு இரத்த சோகை மற்றும் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உடல்நிலை பாதிப்படைகிறது..
மேலும் வெள்ளைப்படுதலை சரி செய்வதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உண்டு, புதினா கீரையின் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் வெள்ளைப்படுதல் சரியாகும், அதேபோல் உடல் சூட்டை குறைக்கும் பட்சத்தில் வெள்ளைப்படுதல் நின்று உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும், மேலும் உடல் சூட்டை குறைப்பதற்காக இருக்கும் காய்கறிகள் பழங்கள் மற்றும் நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் குளுமையாக மாறி உடலில் உள்ள சூடு தணிந்து வெள்ளைப்படுதல் முற்றிலும் நின்றுவிடும், இதுவற்றைத் தாண்டி மருத்துவரை அணுகினால் மட்டும் தீர்வு கிடைக்கும் என்றால் மருத்துவரை அணுகி சிறந்த முறையில் பரிசோதனை பெற்று வெள்ளைப்படுதலை சரி செய்ய முடியும், ஆனால் வெள்ளைப்படுதல் என்பது ஒரு உடல் உருக்கி நோய் அதனை ஆரம்ப காலத்திலேயே சரி செய்து விட வேண்டும்..!!!




