தேவையான பொருள்: வெட்சி பூ ஒரு முழுமையான பூ சீரகம் 5 கிராம் பனங்கற்கண்டு தேவையான அளவு தண்ணீர் 100 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 100 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு லேசான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். மேலும் அதனுடன் வெட்சி பூவை மற்றும் அதனுடன் அரைத்தேக்கரண்டி சீரகமும் எடுத்துக்கொண்டு அதனை தண்ணீரில் இட்டு மீண்டும் நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும். மேலும் இதனை வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொண்டு அதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் இரவு ஆகிய இரண்டு வேளைகளிலும் குடித்து வந்தால் வெள்ளைபடுதல் விலகி போகும்.