முடி நரைப்பதற்கு ஒரு நிலையான காரணம் இல்லை. வயது, சூழல், உணவு முறை போன்ற பல காரணங்களால் முடி வெண்மையாக மாறத் தொடங்குகிறது. சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனையால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
சிறு வயதிலேயே வெள்ளை முடி ஏற்பட்டால் பலர் டென்ஷன், மன அழுத்தம், சங்கடம், தன்னம்பிக்கை குறைதல் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர்.
அதன்படி வெள்ளை முடியை மறைக்க கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது முடியை இன்னமும் சேதப்படுத்துகிறது. மேலும் இவை நம் தலை முடிக்கு சரியான பலனைத் தராது.
பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும்.
ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது.
எனவே உங்கள் நரை முடியை கருமையாக்குவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன, அவற்றை பின்பற்றுவதன் மூலம் சிறந்த தீர்வை பெறலாம்.
காபி:
காபியின் இயற்கையான நிறம் கூந்தலை கருமையாக்குவதில் மிகவும் நன்மை பயக்கும். இதைப் பயன்படுத்த, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை சூடாக்கி, அதில் ஒரு ஸ்பூன் காபி தூளை சேர்க்கவும். தண்ணீர் ஆறியதும் அதில் மருதாணி சேர்த்து பேஸ்ட்டை தயார் செய்யவும்.
இப்போது தயாரித்த பேஸ்ட்டை ஒரு மணி நேரம் வைத்திருந்து அதில் ஆலிவ் ஆயில் கலந்து தலைமுடியில் தடவவும்.
இந்த கலவையால், உங்கள் வெள்ளை முடி கருப்பாக மாறும், அத்துடன் இது எவ்வித பக்க விளைவயும் ஏற்படுத்தாது.
கற்றாழை ஜெல்:
ஆரம்ப வெள்ளை முடியில் கற்றாழை ஜெல்லை சரியாகப் பயன்படுத்தினால், சில முடிகள் எளிதில் கருப்பாக மாறும். கற்றாழை ஜெல்லில் எலுமிச்சை சாறு பிழிந்து தலைமுடியில் தடவவும்.
நீங்கள் இதை தினமும் பயன்படுத்த வேண்டியதில்லை, வாரத்திற்கு ஒரு முறை அல்லது அதிகபட்சம் 2 முறை பயன்படுத்தலாம்.
இந்த வைத்தியத்தை உபயோகித்த சில நாட்களுக்குப் பிறகு தான் விளைவைப் பார்க்க முடியும். என்வே அவசரம் வேண்டும்.
கறிவேப்பிலை:
சிறிது கறிவேப்பிலையை எடுத்து நைசாக அரைக்கவும். இப்போது 2 டீஸ்பூன் நெல்லிக்காய் தூளில் 2 டீஸ்பூன் பிரமி பொடியை கலந்து, தண்ணீரில் கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும்.
இந்த ஹேர் மாஸ்க்கை வேர்களில் இருந்து முடி முழுவதும் தடவி, ஒரு மணி நேரம் கழித்து தலையை நன்றாக கழுவுங்கள். அதன் பலனை காலப்போக்கில் காண்பீர்கள். இந்த செய்முறையானது முடியை கருப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகிறது.