வேறு பெண்ணுடன் தொலைபேசியில் பேச்சு..!! புதுமாப்பிள்ளை தற்கொலை..!!
சுபாஷ் என்பவர் திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர்(வயது 27). இவரது மனைவி குமாரி (வயது 25). இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.
இதனிடையே சுபாஷ் வேறொரு பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்தது குமாரிக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து குமாரி சுபாஷிடம் கேட்ட பொழுது அவர் மறுத்துள்ளார். இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி மிகப்பெரிய தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மனமுடைந்த சுபாஷ் நேற்று முன்தினம் (அக்டோபர் 7) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை அடுத்து சுபாஷின் தற்கொலை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.




