வேற லெவல்தான்!! பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் சூரியின் கருடன்..!!5 நாட்களில் இவ்வளவு வசூலா..?

தமிழ் சினிமா உலகில் காமெடியனாக அறிமுகமாகி தற்பொழுது ஹீரோவாக ஜொலித்து வரும் நடிகர் தான் நடிகர் சூரி. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த “விடுதலை” என்கிற திரைப்படத்தின் முதன்முதலில் ஹீரோவாக நடித்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் “விடுதலை பாகம் 2” படம் எப்பொழுது ரிலீஸ் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் சூரி துறை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “கருடன்” என்கின்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

மேலும் அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோகிணி, வடிவுக்கரசி உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த திரைப்படம் மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. மேலும் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி வரவேற்பை பெற்றது, மேலும் வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றது.

சூரியின் “கருடன்” திரைப்படம் வெளிவந்து கடந்த ஐந்து நாட்களில் உலக அளவில் ரூ.20 கோடிக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வார இறுதியில் வசூல் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூரி ‘‘கருடன்” திரைப்படத்தை தொடர்ந்து “விடுதலை 2”, “கொட்டுகாளி” கதாநாயகனாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

தயிரில் வெள்ளரி விதை கலந்து சாப்பிட்டால் கோடை நோய்களிலிருந்து விடுபடலாமா..? முழு விவரம் உள்ளே..!!

Read Next

என்னை பெருமைபடுத்திவிட்டான்..!! செம ஹேப்பியாக தன் தம்பிக்கு ராகவா லாரன்ஸ் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular