
வேலையின்மை மற்றும் அலுவலகத்தில் உள்ள பிரச்சனை தீர இந்த பரிகாரம் பண்ணுங்க போதும்..!!
வேலையில்லாமல் இருப்பவர்கள் மற்றும் வேலை இருந்தும் அலுவலகத்தில் பல பிரச்சினைகளால் வேலை போய் விடுமோ என்ற பயத்தில் இருப்பவர்களும் கண்டிப்பாக இந்த பரிகாரத்தை செய்தால் வேலை கிடைக்கும் அலுவலகத்தில் பிரச்சனைகளும் நீங்கும் அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆன்மீக ரீதியாக சனிக்கிழமையாக தேர்ந்தெடுத்து ஒரு கிலோ கருப்பு உளுந்து மற்றும் ஒரு கிலோ நிலக்கரி இரண்டையும் ஒரு மீட்டர் நீளம் மற்றும் அகலம் கொண்ட கருப்பு துணியில் நன்றாக முடிந்து வைத்து அதை சாதகர் தலை மற்றும் உடலை 21 முறை வலது புறமாக சுற்றி (வேறு நபர் சுற்றலாம்). பின்பு அதை ஓடும் நேரில் அதாவது ஆறு ஏரி கடல் நீர்நிலைகள் போன்றவற்றில் விட்டு விட வேண்டும். பின்பு அங்கேயே நின்று ராம பக்த ஆஞ்சநேயரை மனதார வேண்டிக் கொண்டு வீடு திரும்ப விரைவில் நல்ல செய்தி வரும். இதை சனிக்கிழமை காலை ஆறு முதல் ஏழு மணி வரை செய்ய மிகுந்த பலன் தரும் .முடியாதவர்கள் வேறு நேரங்களில் செய்யலாம். ஆறு மணிக்கு முன்பு செய்து விட வேண்டும். இத மட்டும் பண்ணுங்க உங்க பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.