இன்றைய காலகட்டங்களில் வேலை இல்லாமல் இளைஞர்கள் பலர் மனவேதனையில் வாழ்ந்து வருகின்றனர் சிலர் தவறான முடிவுகளையும் எடுத்து தங்களின் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு வேலை வேண்டுமா, மனக்கவலை குறைய வேண்டுமா திருமணம் நடக்க வேண்டுமா? குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா உடனே இந்த கோவிலுக்கு செல்லுங்கள் நல்லதாகவே நடக்கும்.
குரு பார்த்தால் கோடி புண்ணியம் என்பார்கள் குருவின் பார்வை நமது ராசியின் மீது பட்டால் தீமைகள் எல்லாம் விலகி நன்மைகள் எல்லாம் பெருகோடும் என்று கூறுவது வழக்கம், அப்படி இருக்கும் பட்சம் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது குரு பகவானின் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நமக்கு பிடித்த பீடைகள் எல்லாம் விலகிடும் என்று பஞ்சாங்கம் கூறுகிறது, குருவை வணங்கி வந்தால் சிறந்த கல்வி, ஆரோக்கியமான வளம், குறையாத செல்வம், சமூகத்தில் மதிப்பு மரியாதை என பலவும் கிடைக்கும் என்று கூறுகின்றனர், உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று குருவை வணங்கி வந்தால் எல்லா மாற்றமும் எளிதில் நடக்கும் என்று நம்புகின்றனர்..!!