
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் செல்வக்கனி (51). இவரின் மகன் லோகநாதன் என்பவருக்கு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 14, 15, 000 பணத்தை பெற்றுக்கொண்டு போலியாக பணி ஆணையை தயாரித்து கொடுத்து செல்வக்கணினியை ஏமாற்றி உள்ளனர். பணத்தை திரும்ப கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கரூர் எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகாரை பெற்று சிஎஸ்ஆர் பெற்றுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய சக்திவேல், சந்திரசேகர், குமார் ஆகிய 3 பேர் மீது மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.