வைகை ஆற்றில் அதிகரித்து வரும் நீர்வரத்து..!! கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசன கால்வாய்களில் தண்ணீர் அதிகரிக்கும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் அடிப்படையில் 15 நாட்களுக்கு மூன்று கட்டங்களாக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கான கடந்த பத்தாம் தேதி வைகை அணையில் இருந்து 3000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவைக்காக 5 நாட்களில் மொத்தம் 915 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட தேவைக்காக 376 மில்லியன் கன அடி தண்ணீர் மதுரை மாவட்ட தேவைக்காக 29 மில்லி கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் காரணத்தால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நீர் நிலையின் அருகே செல்ல வேண்டாம் எனவும் கால்நடைகளை நீர்நிலை அருகே கட்டி வைக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் வேண்டாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காவல்துறையினர் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Read Previous

கிடு கிடுவென உயர்ந்த மல்லிகை பூ விலை..!! காரணம் என்ன தெரியுமா..?

Read Next

மக்களுக்கு சென்ற திடீர் குறுஞ்செய்தி..!! பேரிடர் மேலாண்மை ஆணையம் திடீர் எச்சரிக்கை காரணம் என்ன..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular