சமைப்பதற்கு முன்னர் தவறாமல் செய்ய வேண்டியவை பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் நாம் சாப்பிடும் உணவில் தீங்கு தரக்கூடிய பாக்டீரியாக்கள் உள்ளது…
காலிபிளவர் சீசனுக்கு மட்டுமே வரக்கூடிய காய்கறிகளில் ஒன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் காய் என்றால் இதனை கூறலாம் இதில் ஃப்ரை செய்தும் பக்கோடா செய்து பலர் சிற்றுண்டியாக சாப்பிட்டு வருவது உண்டு, ஆனால் இதிலிருக்கும் ஒரு குறை என்னவென்றால் இதில் காணப்படும் புழுக்கள் தான் பல சமயங்களில் இதில் காணப்படும் குழுக்கள் அதன் தரத்தை குறைப்பதோடு அதனை சரியாக சுத்தம் செய்யாமல் நாம் சாப்பிடும் பச்சத்தில் உடல்நல கோளாறுகளையும் ஏற்படுத்திவிடுகிறது, அதனால் இந்த காய்கறிகளை சமைப்பதற்கு முன்னர் சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும் அதன் பின்னரே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் அப்படி இதனை சுத்தம் செய்ய சில எளிய முறைகள் பற்றி நாம் தெரிந்து கொள்ள போகிறோம், காலிஃப்ளவரில் பூச்சிகள் மற்றும் புழுக்கள் ஊடுருவி முட்டையிடுமாம் அப்படி முட்டையிடும் நிலையில் அதிலிருந்து வெளிவரும் புழுக்கள் தான் இதில் காணப்படுகிறது சில சமயங்களில் நமது கண்களுக்கு தெரியாத அளவிற்கு அதில் காணப்படும் புழுக்கள் சிறியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் உப்பு சிறிதளவு கலந்து கொள்ளுங்கள் அந்த உப்பு நீரில் இந்த காலிஃப்ளவரை போட்டு ஒரு 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஊற விடவும் அதன் பின்னர் இதனை எடுத்து சுத்தம் செய்து சமைக்கலாம், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் துண்டுகளாக பிரித்து இந்த காயை போடவும் பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி வெண்ணை அல்லது எண்ணெய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு எடுத்து குளிர்ந்த நீரில் போடவும் அதன் பின்னர் அதனை சுத்தம் செய்து சமைக்கலாம், அதேபோல் வினிகர் கலந்த நீரில் காலிஃப்ளவரை போட்டு 10 நிமிடங்கள் ஊறவிட்டு பின்னர் சுத்தம் செய்து சமைக்கலாம் அப்படி இல்லை என்றால் மைக்ரோவேவ் பாத்திரத்தில் இந்த காயை துண்டுகளாக போட்டு ஐந்து நிமிடங்கள் உள்ளே வைத்து எடுத்து குளிர்ந்த நீரில் சேர்த்த பின்னர் சமைக்கலாம்..!!!