தமிழகத்தில் பல்வேறான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை திறந்ததாக செய்தி வெளிவந்துள்ளது..
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் பள்ளியில் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9 வரை மாணவிகளுக்கு NSS பயிற்சி நடைபெற்றுள்ளது, 17 மாணவிகள் பள்ளியிலேயே தங்கி பயிற்சி பெற்ற அந்த நிலையில் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகியான சிவராமன் மற்றும் ஒரு சிலர் பயிற்சி தந்து வந்தனர், இந்நிலையில் இரவு நேரங்களில் 13 மாணவவிகளை மிரட்டி பாலியல் தொல்லை தந்ததாக மாணவிகள் கூறியுள்ளனர், இந்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் சிவராமன் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..!!