
இந்திய அரசாங்கமானது, தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடுவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புது டெல்லி பிரகடனத்தினை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் முன்மொழிந்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பினர் நாடுகள் அனைத்தும் புது டெல்லி பிரகடனத்தை ஏற்றுக் கொண்டன. தீவிரமயமாக்கலைப் பரப்பும் நடைமுறைகளைத் தடுத்தல், பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கு ஏதுவான நிலையான வாழ்க்கை முறை, சிறு தானிய உற்பத்தி மற்றும் எண்ணிம மாற்றம் குறித்த நான்கு கூட்டு அறிக்கைகளும் இந்த பிரகடனத்தில் முன் மொழியப் பட்டுள்ளது.