
பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கான் விபத்தில் சிக்கியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது நடிகர் ஷாருக்கானுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஷாருக்கானின் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் ஷாருக்கின் மூக்கில் சிறிய அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தற்போது ஷாருக்கான் சிகிச்சை முடிந்து மும்பை திரும்பியுள்ளார் என்றும் அவர் குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது.