ஸ்டீவ் ஜாப்ஸ் தினமும் தனக்குத்தானே கேட்டுக் கொண்ட ஒரு கேள்வி என்ன தெரியுமா..!!

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சிகரமான சிந்தனையாளர் அவரது வெற்றிக்கு பல காரணிகள் இருந்தாலும் அவர் தினமும் காலையில் தனக்குத்தானே கேட்டுக் கொண்ட ஒரு முக்கியமான கேள்வி அவரது வாழ்க்கை பாதையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. அந்தக் கேள்வி என்ன அதன் முக்கியத்துவம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..

ஸ்டீவ் ஜாப்ஸ் தினமும் காலையில் கண்ணாடியை பார்த்துக் கொண்டு இன்று என் வாழ்வின் கடைசி நாள் என்றால் இன்று நான் என்ன செய்ய விரும்புவேன் என்று தனக்குத்தானே கேட்டுக் கொள்வார். இந்த கேள்வி ஒரு எளிய கேள்வி போல் தோன்றலாம் ஆனால் இது அவரது எண்ணங்களையும் செயல்களையும் கூர்மைப்படுத்தியது..

அவரது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் ; இந்த கேள்வி ஜாப்ஸின் வாழ்க்கையில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது அவர் முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தவும் நேரத்தை வீணடிக்கும் விஷயங்களை தவிர்க்கவும் உதவியது ஒவ்வொரு நாளையும் கடைசி நாள் போல் கருதுவதால் அவர் தனது ஆற்றலையும் கவனத்தையும் மிகவும் முக்கியமான விஷயங்களில் ஒதுக்கினார்.மரணத்தை நினைவு கூறுவது அவருக்கு துணிச்சலை கொடுத்தது. தோல்வி பயம் மற்றும் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளின் அழுத்தம் ஆகியவற்றை கடக்க இது அவருக்கு உதவியது இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற எண்ணம் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் ரிஸ்க் எடுக்கவும் அவரை தூண்டியது..

ஒவ்வொரு நாளையும் முழுமையாக வாழ வேண்டும் என்ற புதுதலை இந்த கேள்வி அவருக்கு அளித்தது. அவர் தனது வேலை மற்றும் வாழ்க்கையில் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட இது உதவியது.

மரணத்தை எதிர்கொள்ளும் மன உறுதி அவருக்கு ஒரு வித தன்னம்பிக்கையை அளித்தது. இது அவரது முடிவுகளில் உறுதியாகவும் தனது பார்வையில் தெளிவாகவும் இருக்க உதவியது. இந்த கேள்வி ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையில் பல முக்கியமான முடிவுகளை எடுக்க உதவியது. ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறப்பட்ட பிறகு நெக்ஸ்ட் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கவும் பிக்சார் என்ற அனிமேஷன் சூர்யாவில் முதலீடு செய்யவும் இது அவருக்கு உந்துதலாக இருந்தது பின்னர் ஆப்பிள் நெருக்கடியில் இருந்த போது மீண்டும் நிறுவனத்திற்கு திரும்பி அதை உலகின் மிக மதிப்பு மிக்க நிறுவனங்களில் ஒன்றாக மாற்றவும் இந்த கேள்வி அவருக்கு உதவியது.

ஸ்டீவ் ஜாப்ஸ் போலவே தினசரி இந்த கேள்விகளை கேட்டுக்கொள்வது நமது எண்ணங்களையும் செயல்களையும் மாற்றி நமது வாழ்க்கையை மேம்படுத்த உதவும். ஒவ்வொரு நாளையும் கடைசி நாள் போல் கருதி நமது உண்மையான விருப்பங்களை பின்தொடரவும் நமது நேரத்தை மதிப்பாக பயன்படுத்தவும் நமது பயத்தை எதிர்கொள்ளவும் இது நமக்கு உந்துதலாக அமைகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் இன் இந்த வாழ்க்கை பாடம் நம் அனைவருக்கும் ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷம்…!!

Read Previous

IND vs AUS 2024: கடைசி டெஸ்ட் போட்டியில் மழை வருமா?.. வெளியான வானிலை அறிக்கை..!!

Read Next

உறவை வலுப்படுத்த கட்டி காக்க உதவும் பண்புகள் மற்றும் அவற்றின் நெறிமுறைகள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular