ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், பார்சிலோனா எஃப்சி அணி செகன்ட் டிவிஷன் அணியான அல்பாசெட்டை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அல்பாசெட் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பார்சிலோனாவுக்காக லாமின் யமால் மற்றும் அரௌகோ கோல் அடித்தனர். அல்பாசெட் அணி ஆறுதல் கோல் அடித்தது. இந்தப் போட்டியில் பார்சிலோனா 72% பந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. கடந்த 17 போட்டிகளில் 16-ல் பார்சிலோனா வெற்றி பெற்றுள்ளது.




