ஸ்பெஷல் கிளாஸ் நடத்துவதற்காக பள்ளிக்கு சென்ற உதவி தலைமை ஆசிரியர்..!! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.,!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உதவி தலைமை ஆசிரியராய் பணிபுரிந்து  வருகின்றார். இவர் தனது மாணவர்களுக்கு ஏற்படுத்திய சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பி உள்ளார்.

அப்போது கச்சிராபாளையம்  சாலையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற சைக்கிளை மோதாமல் இருப்பதற்காக தனது இருத்தக்கர வாகனத்தை திருப்பி உள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கிருஷ்ணமூர்த்தி கீழே விழுந்தார்.

இந்த சூழலில் பின்னால் வந்த டிராக்டர் ஒன்று கீழே விழுந்து கிடந்த கிருஷ்ணமூர்த்தி மீது ஏறி இறங்கி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் உயிர் இழந்தார். இதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

கல்விக்கட்டணத்தை கேட்டு நெருக்கடி, தகாத பேச்சு..!! திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை..!!

Read Next

தாயின் கண் எதிரே நடந்த கொடூரம்..!! 4 வயது குழந்தை மூளை சிதறி பலியான அதிர்ச்சி சம்பவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular