ஸ்பெஷல் மொகல் பிரியாணி செய்வது எப்படின்னு தெரியுமா?.. செய்முறை விளக்கம்..!!

பிரியாணியில் பல வகைகள் உண்டு. ஸ்பெஷல் மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ, பாசுமதி அரிசி – 2 கப், தயிர் – 1 கப், வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், சீரகப் பொடி – 1 டீஸ்பூன், மல்லி தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1/2 டீஸ்பூன், பட்டை – 1, மிளகு – 6, கிராம்பு – 4, ஏலக்காய் – 4, பிரியாணி இலை – 1, குங்குமப்பூ – 1 சிட்டிகை, முந்திரி – 10 உலர் திராட்சை – 10, நெய் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

மட்டனை சிறிது துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். குங்குமப்பூவை சிறிது பாலில் ஊறவைக்கவும். மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக பிரட்டி, 45 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட வேண்டும்.

இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் ஊற வைத்துள்ள மட்டனை போட்டு வதக்க வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து மட்டனை வேக வைக்க வேண்டும்.

அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.

அடுத்து முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு தீயை குறைவில் வைத்து வதக்கி விட்டு, பாசுமதி அரிசியை நீரில் கழுவி குக்கரில் போட்டு, அரிசியை 5 நிமிடம் வறுக்க வேண்டும்.

மட்டனானது பாதி அளவு வெந்து கிரேவி பதம் வந்தவுடன் அதை எடுத்து குக்கரில் அரிசியுடன் சேர்த்து பிரட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.

மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் குங்குமப்பூ பாலை ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும். சூப்பரான மொகல் மட்டன் பிரியாணி ரெடி. அப்புறம் என்னங்க அசத்துங்க…

Read Previous

அதிர்ச்சி..!! கணவர் மரணம்..!! மகனுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்..!!

Read Next

2700 பணியிடங்கள்..!! Degree முடித்தவர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular