
இன்றைய காலகட்டங்களில் பலரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர், பெரும்பான்மையோர் ஸ்மார்ட் ஃபோனில் தவறுதலாக மற்ற நம்பருக்கு பணம் செலுத்தி விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்..
UPI மூலமாக பணம் செலுத்தும் போது சில நேரங்களில் தவறுதலாக மற்ற நம்பர்களுக்கு (நபர்களுக்கு) செல்வது வழக்கம் இப்படி இருக்கும் பட்சத்தில் முதலில் பரிவர்த்தனை கணக்கை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைக்கவும், பிறகு UPI வாடிக்கையாளர் சேவைக்கு தெரியப்படுத்தவும், தீர்வு கிடைக்கவில்லை என்றால் NPCI க்கு புகார் தெரிவிக்கவும், மேலும் 1800-120-1740 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம், இல்லையென்றால் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கி கணக்கு எண்ணை கொண்டு அந்த வங்கியிலேயே தொடர்பு கொள்ளலாம் இதனால் உடனடி தீர்வு கிடைக்கும்..!!