தமிழ்நாடு முழுவதும் விரைவில் மின் பயன்பாட்டைக் கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன. நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் திட்டம். இந்தியாவில் 22.98 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ள நிலையில், இவற்றில் 66.86 லட்சம் மீட்டர்கள் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் மின் கணக்கிட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ள நிலையில், பகல் நேர உபயோகத்திற்கு கட்டணத்தை குறைக்கவும், இரவு நேர உபயோகத்திற்கு கட்டணத்தை உயர்த்தவும் திட்டம்.
இதனால், பீக் ஹவர்களில் தேவையற்ற உபயோகம் தடுக்கப்படும் என அமைச்சகம் தகவல். ஸ்மார்ட் மீட்டர் மூலம் நேரத்திகேற்ற மின் பயன்பாட்டை எதிர் கணக்கிட முடியும். மாநிலத்தில் முதற்கட்டமாக 3 லட்சும ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. வீடுகளுக்கு இரண்டாம் கட்டமாக இந்த மீட்டர்கள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.