
ஹனிமூன் சென்ற தம்பதி சுட சுட நண்டு சாப்பிட்டதால் மனைவி துடி துடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்பவருக்கு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கிருபா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இருவரும் தமிழக கேரளா எல்லையான நெட்டாவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தங்கியிருந்த விடுதியில் சுட சுட நண்டு உணவை சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, கிருபாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.