இன்றைய காலகட்டங்களில் அடுப்பில் தண்ணீர் காய வைத்து குளிப்பவர்களை காட்டிலும் வாட்டர் ஹீட்டர் தான் பயன்படுத்துகின்றனர் பலரும் வேலையும் சுலபமாக முடிந்து விடுகிறது என்று.
தற்சமயம் பல இடங்களில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் நிலை அதிகரித்து வருகிறது இந்த நிலையில் வாட்டர் ஹீட்டரில் குளிப்பதனால் உடலின் சோர்வு தன்மையை நீங்கும் என்கிற நம்பிக்கை பெரிதும் எல்லோரிடமும் உண்டு, நமது கை விரல்கள் ஈரமாக இருக்கும் போது வாட்டர் ஹீட்டர் சுவிட்ச் தொடுவதனால் மின்சாரம் தாக்கி சில நேரங்களில் அசம்பாவிதம் ஏற்படுகிறது என்றும், ஹீட்டர் தண்ணியில் நெடுநேரம் குளித்தால் தோல் நோய் மற்றும் சரும அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவ ஆலோசனை நிபுணர்கள் கூறுகின்றனர்..!!