ஹீட்டர் தீப்பற்றியதில் தந்தை, மகள் பலி..!!

ராஜஸ்தானின் கைர்தல்-திஜாரா மாவட்டத்தில் வீடு தீப்பிடித்து எரிந்ததால் தந்தை, மகள் உயிரிழந்தனர். தீபக் யாதவ் என்பவர் டிரைவராக பணிபுரிகிறார். வெள்ளிக்கிழமை வீட்டில் குளிர் அதிகமாக இருந்ததால் ரூம் ஹீட்டரை ஆன் செய்துள்ளார். அப்போது வெப்பம் அதிகரித்து வீட்டில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்குள் தீ வீடு முழுவதும் பரவியதால், தீபக் மற்றும் அவரது 3 மாத மகள் நிஷிகா உடல்கருகி இறந்தனர். இதில் தீபக்கின் மனைவி சஞ்சு பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Read Previous

சொத்துக்காக பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன்..!!

Read Next

10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular