
இன்றைய காலகட்டத்தில் பலரும் உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவானவர்களாகவே இருக்கின்றனர்..
ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க சில வகையான உணவு முறைகளை தினந்தோறும் பின்பற்றும் பொழுது உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் நோயற்றதாகும் காணப்படும், அவற்றில் பேரிச்சை பழம் தினமும் நான்கு சாப்பிட்டு வர வேண்டும், முருங்கைக்கீரை வாரம் இரு முறை முருங்கைக்கீரை பொரியல் அல்லது முருங்கைக்கீரையில் சூப்பு செய்து சாப்பிட்டு வரவும், அதேபோல் பீட்ரூட் ஜூஸ் தினந்தோறும் 100 மில்லி அளவு குடித்து வர உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதோடு உடல் வலிமையாகும் முகம் பளபளப்பாகவும் காணப்படும், முளைகட்டிய சுண்டல் பாசிப்பயிறு வாரம் நான்கு முறை சாப்பிட்டு வந்தால் உடல் புத்துணர்வாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், கருப்பட்டி, வெல்லம், நாட்டு சக்கரை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும், மாதுளை திராட்சை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வருவதன் மூலம் ஹீமோகுளோபின் அதிகரிக்கும், ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் நான்கு வீதம் சாப்பிட்டு வர வேண்டும் பீர்க்கங்காய் வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர வேண்டும், நெல்லிக்காய் தினம் ஒன்று சாப்பிட்டு வருவதன் மூலம் ஹீமோகுளோபின் உற்பத்தி திறன் அதிகரிக்கும், உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் பட்சத்தில் ஒழுங்கற்ற இதைத் துடிப்புக்கு வழிவகுக்கும் ரத்த சோகையால் கை கால்களுக்கு ரத்த ஓட்டம் குறையும் மேலும் உடல் சோர்வற்று உடலில் பல்வேறான பிரச்சனைகளை உருவாக்கும்..!!