
ஹெல்தியான முறையில் பீட்ரூட் பரோட்டா செய்து சாப்பிடலாம்.
பொதுவாகவே அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களில் ஒன்று பரோட்டா. ஆனால் இது உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் பீட்ரூட் பயன்படுத்தி பரோட்டா செய்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
பீட்ரூட் பரோட்டா செய்ய முதலில் பீட்ரூட்டை தோல் சீவி எடுத்துக்கொண்டு பிறகு கடாயை எண்ணெய் ஊற்றி துருவிய பீட்ரூட்டை தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மிளகாய்த்தூள் மஞ்சத்தூள் எடுத்துக்கொண்டு அதில் பீட்ரூட் மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போல பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். 15 நிமிடம் ஊற வைத்து பிறகு மாவைத் திரட்டி சுட்டு சாப்பிடலாம்.
மேலும் பீட்ரூட்டை ஜூஸ் ஆக குடித்து வந்தால் அல்சர் பிரச்சனை குணமாவது மட்டுமல்லாமல் ரத்த சிவப்பணுக்களை அதிகமாகி இரத்த சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
எனவே ஆரோக்கியம் அற்ற பரோட்டா கடை சாப்பிடுவதை தவிர நம் உடலுக்கு ஆரோக்கியத்தாய் தரும் பீட்ரூட் பரோட்டாவை நம் வீட்டிலேயே செய்து சாப்பிட்டு நோய் நொடி இன்றி வாழ்வோம்.