இரண்டு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிந்து ஓட்டுவதன் மூலம் விபத்து மற்றும் உயிர் சேதத்தை தவிர்க்க முடியும் என்று நமக்கு தெரியும், அப்படி இருக்கும் பட்சத்தில் மேற்கு வங்கத்தில் ஹெல்மெட் அணிந்து அரசு பஸ் டிரைவர்கள் இன்று வேலை செய்தனர்..
மேற்கு வங்கத்தில் ஹெல்மெட் அணிந்து அரசு பஸ் டிரைவர்கள் இன்று வேலை செய்தனர், சில நாட்களுக்கு முன்பே ஏற்பட்ட கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்டது கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீஸ் தலையில் நடத்தியது அதனை தொடர்ந்து இதை எதிர்த்த பாஜக சார்பில் இன்று பெங்கால் பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது, அந்தப் போராட்டத்தில் கல்வீச்சினால் மண்டை உடைய கூடாது என முன்னெச்சரிக்கையாக டிரைவர்கள் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கியதை பயணிகள் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் பார்த்தனர், மேலும் பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்களும் எதிர்ப்புகளும் நடந்து வரும் நிலையில் அதற்கான சரியான தீர்ப்பு இன்னும் வெளி வராததை கண்டு மக்கள் பலரும் வருகின்றனர்..!!