• September 12, 2024

ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்ட கனரா வங்கி எக்ஸ் தள பக்கம்..!!

இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை அரசு வங்கியான கனரா வங்கியில் சமூக வலைதள எக்ஸ் கணக்கு ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது, இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பொதுத்துறை அரசு வங்கியான கனரா வங்கியின் சமூக வலைதள பக்கமான எக்ஸ்த்தள கணக்கு ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. இதைப்பற்றிய தகவலை அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது. அந்த வங்கியின் அதிகாரப்பூர்வமான எக்ஸ் தள பக்கமான Canaabank_X ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.  அதன் பின் அந்த ஹேக்கர் அந்த அதிகாரப்பூரம் வங்கியின் பெயரை ether.fi என மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. கனரா வங்கியின் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டதை தொடர்ந்து கனரா வங்கி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தங்கள் வாடிக்கையாளர்கள் எதையும் வெளியிட வேண்டாம் என்றும் வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.எக்ஸ் தள கணக்கு பக்கம் மீண்டும் தனது கட்டுப்பாட்டில் வந்ததும் அது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கனரா வங்கி தெரிவித்துள்ளது.

இது மட்டும் இன்றி கடந்த வாரம் இதே போல் ஆக்ஸிஸ் வங்கியிலும் இதே போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹேக்கர்கள் ஆக்சிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்தனர் அதிகாரப்பூரம் வங்கி கணக்கின் பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஒரு புள்ளி வைத்தனர். இதனுடன் மேலும் அந்த ஹேக்கர் கிரிப்டோ கரன்சி தொடர்பாக அங்கீகரிக்கப்படாத இடுக்கைகளையும் வெளியிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனரா வங்கி கடந்த 1906 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூர் ஆம்மேபாள் சுப்பா ராவ் பாய் என்பவரால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு ஆண்டுகளாக கனரா வங்கி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 13 துணை நிர்வாகங்கள் மற்றும் ஸ்பான்சர் செய்யப்பட்ட நிறுவனங்களுடன் ஒரு பெரிய நிதி குழுவாக வளர்ந்து வருகிறது. இந்த வருடம் மார்ச் நிதியாண்டு நிலவரப்படி கனரா வங்கி அனைத்து இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 964 கிளைகள் மற்றும் 12155 ஏடிஎம்கள் மூலம் 11.17 கோடி மக்களுக்கு சேவை செய்து வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.

Read Previous

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் இரண்டு துணை ராணுவ வீரர்கள் பலி..!!

Read Next

அடுத்தடுத்து அப்பளம் போல் நொறுங்கி விழும் பலங்கள்..!! பீகாரில் பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular