ஹோட்டல் மற்றும் கல்யாண வீடுகளில் கிடைக்கும் சுவையில் சூப்பரான பிரட் அல்வா..!!

கல்யாண வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் பிரியாணியுடன் கொடுக்கப்படும் பிரட் அல்வா பலருக்கும் பிடித்தமான ஒன்று. பல பிரபலமான ஹோட்டல்களில் சிக்னேச்சர் உணவாக இந்த பிரட் அல்வா இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை என்றாலே கட்டாயம் பிரியாணி செய்து உண்டு மகிழ வேண்டும் என்று நினைப்பவர்கள் அதனுடன் இந்த பிரட் அல்வாவையும் ஆற அமர ருசித்து சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது. பார்க்கும்பொழுதே நாவில் எச்சில் ஊற செய்யும் இந்த பிரட் அல்வா இனி கல்யாண வீடுகளில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை நாமே வீட்டில் எளிமையாக செய்யலாம்.

பிரட் அல்வா செய்யும் முறை:

இதற்கு பிரட் பாக்கெட்டில் இருந்து 8 பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பிரட் துண்டுகளின் ஓரங்களில் நான்கு புறமும் வெட்டி எடுத்து விட வேண்டும்.

ஒரு கடாயில் பிரெட் பொரிக்க தேவையான அளவுக்கு எண்ணெய் சேர்த்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது பிரட் துண்டுகளை நான்காக நறுக்கி இதில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொரித்து எடுத்த பிரட் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் அரை கப் சீனி சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும் இதை அடுப்பில் வைத்து இரண்டு ஏலக்காய்களை எடுத்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

இது கொதித்ததும் ப்ரெட் துகள்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க ஆரம்பித்து கிளற வேண்டும். பிரட் துண்டுகள் சீனித் தண்ணியை முழுமையாக உறிஞ்சி இறுக ஆரம்பித்து இருக்கும் இப்பொழுது ஒரு டம்ளர் பால் சேர்த்து கெட்டியாகும் வரை கிளற வேண்டும். அனைத்தும் சேர்ந்து கெட்டியாகி அல்வா பதத்திற்கு வந்த பின்பு அடுப்பினை அணைக்கவும்.

இப்பொழுது இரண்டு ஸ்பூன் நெய்யில் முந்திரிப் பருப்பு வறுத்து எடுத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.

அவ்வளவுதான் ஹோட்டல் சுவையில் சூப்பரான பிரட் அல்வா தயார்…!

Read Previous

இந்த 4 பண்புகள் உள்ளவர்களை திருமணம் செய்யாதீர்கள்..!! ஆபத்து உங்களுக்குத்தான்..!!

Read Next

‘தமிழிசை குடிக்க மாட்டார்’..!! திருமா பேச்சுக்கு வானதி கண்டனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular