அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி கூட பிறந்தவர்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள் தான்..!! படித்ததில் பிடித்தது..!!

அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி கூட பிறந்தவர்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள் தான்….

அக்கா மகளுக்கு திருமணம் என்றால்
அக்கா, தங்கச்சி, மதினி, நாத்தனார் ,
எல்லோரும் சேர்ந்து ஊர் அழைக்க போவார்கள்..

திருமணத்திற்கு தேவையான பொருட்களை எல்லோரும் சேர்ந்து வாங்க போவார்கள்

திருமண அழைப்பிதழ் வழங்கும் போது
அக்கா மகன், தங்கச்சி மகன் ,அண்ணன் மகன், தம்பி மகன், சித்தப்பா மகன், பெரியப்பா மகன், அத்தை மகன், மாமா மகன், என்று ஒரு கூட்டமாக போய் ஊருக்கே திருமண அழைப்பிதழ் வழங்குவர்கள்..

திருமணத்திற்கு பேணர் வைத்தால் அதில் ஒரு பட்டாளமே இருக்கும்…

கல்யாண மண்டபமே கலைகட்டும் அவ்வுளவு சொந்த பந்தம்..

எல்ல வேலைகளையும் இழுத்து போட்டு செய்வார்கள் சொந்தம் பந்தம்…

திருமணம் முடிந்து மருவீடு வரும் போது
நான் தான் ஆராத்தி எடுப்பேன் என்று உரிமையை வீட்டு கொடுக்காத மதினி..

என்னுடைய பெரியம்மா மருமகளுக்கு நான் தான் பாலும் பழமும் கொடுப்பேன்
என்று மாப்பிள்ளையின் அக்கா உரிமையுடன் சொல்வது..

இதெல்லாம் அக்கா தங்கச்சி அண்ணன் தம்பி கூட பிறந்த மட்டும் தான் சாத்தியம்…

இன்று காலம் மாறி போச்சு
இன்று ஒரேயொரு குழந்தை மட்டும் போதும் என்று முடித்து கொள்கிறார்கள்.

அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி என்று
இப்போது சந்தோஷமாக இருக்கும்
நாளைக்கு அந்த ஒரு குழந்தை பெரியாள வரும் போது திருமணம் சடங்கு என்று வரும் போது நீங்க மட்டும் தான் தனியாளாக தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும்… அப்போது தெரியும்…

இன்று காசு கொடுத்தால் எல்லாம் நடக்கும் என்று சொல்வார்கள்..

பணத்தை வாங்கிக்கொண்டு
அவர்களுடைய வீட்டுக்கு போய் விடுவார்கள் .

உங்க பிள்ளைக்கு ஆராத்தி எடுப்பது யார்??

உங்க பிள்ளைக்கு பாலும் பழமும் கொடுப்பது யார்???

முதலிரவு அறைக்கு உங்க பெண்னை தயார் செய்து அனுப்பி வைப்பது யார்???
எல்லாத்துக்கும் ஒரு உறவு முறை இருக்கு…

இன்றைய பொருளாதாரத்தை கருதி ஒரு குழந்தை போதும் என்று நினைக்கிறார்கள் இது தவறு..

குழந்தைகளே இல்லை என்றால் அது வேறு ஒரு குழந்தை மட்டும் போதும் என்று நிறுத்துவது தவறு..

எங்க ஊரில் ஒரு திருமணம்
இந்த தேதியில் நிச்சயதார்த்தம் என்று சொல்ல மொத்த பத்து பேர் வந்தார்கள்…

அதற்கு பிறகு தான் இந்த பதிவை எழுத வேண்டும் என்று நினைத்தேன்..

Read Previous

நோயின்றி வாழ பதிமுக நீர்..!! இயற்கையாகவே வாழப் பழகு இயற்கை உணவை உட்கொண்டு..!!

Read Next

எந்நிலையும் தன் கணவனை, மனைவியை விட்டும் பிரியாத இதுவும் ஒரு வகையான அன்பு தான்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular