இளநீர் குடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..?? இளநீரின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பா படிங்க..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த இளநீரில் இருக்கும் நன்மைகள் பற்றி கூறி வருகிறார்கள். இந்நிலையில் இளநீர் குடித்தால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தற்போது பார்க்கலாம்.
இளநீர் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த அழுத்தம் சமநிலையில் இருக்கும். உடலில் கொழுப்பு சேராமல் இருக்கும். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். முக்கியமாக சிறுநீரகற்களை முற்றிலுமாக நீங்கிவிடும். செரிமான பிரச்சனை வாயுத்தொல்லை அகலும். பல் ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தையும் இது சரி செய்யும். பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து நமது உடலை பாதுகாக்கும். தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து அதன் சுரப்பியை திறம்பட செயல்பட வைக்கும்.
நம் உடலின் வறட்சி பிரச்சனையை சரி செய்து நீர் சத்து அதிகரிக்கப்படும். நம் உடலில் பொலிவான தோற்றத்தையும் உடல் ஆற்றலையும் தேங்காய் தண்ணீர் குடிப்பதன் மூலம் பெற முடியும்.




