இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கு காரணம் என்ன..?? மற்றும் அவற்றை தடுக்கும் வழிகள் என்னென்ன..??

இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கு காரணம் என்ன..?? மற்றும் அவற்றை தடுக்கும் வழிகள் என்னென்ன..??

சிலருக்கு பரம்பரை பரம்பரையாக மரபணு காரணமாக இந்த மாரடைப்பு வரலாம். ஒரு சிலருக்கு போதிய உடல் செயல்பாடு இல்லாமல் உடல் பருமன் அதிகரித்து இருப்பதன் காரணமாக கூட மாரடைப்பு வரலாம். ஒரு சிலருக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் கலக்கப்பட்ட பானங்கள் ஆகியவற்றை குடிப்பதாலும் மாரடைப்பு ஏற்படலாம். அதுமட்டுமின்றி எண்ணையில் பொறிக்கப்பட்ட உணவுகள் தாமதமாக தூங்குவது தூங்காமல் இருப்பது மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிப்பு போன்றவற்றாலும் மாரடைப்பு வரலாம். புகைப்பிடித்தல் மது அருந்துதல் போதைப் பழக்கங்கள் போன்றவை இதய செயல்பாட்டை பாதிக்கும்.

மாரடைப்பு வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

மாரடைப்பு வருவதை தடுப்பதற்கு நல்ல தூக்கம் தூங்குவது மிகவும் அவசியம். குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். ஒரு வாரத்தில் நாலு முதல் ஐந்து நாட்கள் மிதமான உடற்பயிற்சி செய்தாலே போதும். குடும்ப உறுப்பினர்களுக்கு மாரடைப்பு இருப்பின் இளம் வயதிலேயே உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்த வேண்டும். 25 வயதுக்கு மேல் இருப்போர் கெட்ட கொழுப்பு பரிசோதனையை செய்து பார்க்க வேண்டும்.

Read Previous

இளநீர் குடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..?? இளநீரின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பா படிங்க..!!

Read Next

391 பேருக்கு வேலைவாய்ப்பு..!! ரூ.70,000/- வரை சம்பளம்..!! அடித்தது ஜாக்பாட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular