ஆரோக்கியம் என்பது உடலை மட்டும் சார்ந்ததில்லை. மனம் மற்றும் உடலைச் சார்ந்தது. நீங்கள் உங்கள் மனதில் நினைப்பதை உடலால் செய்ய முடிந்தாலும், உங்கள் உடலினால் செய்ததை மனதால் உணர முடிந்தாலும் நீங்கள் ஆரோக்கியமாகவே இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். இந்நிலையில் உடல் ஆரோக்கியத்தின் கட்டளைகளைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
1. நொறுங்க தின்றால், நூறு ஆயுசு.
2. பிடித்ததை உண்டால், கெடாது ஆரோக்கியம் நமக்கு.
3. வாய்மூடிமென்றால், அதிகரிக்கும் ஜீரணம் நமக்கு.
4. ரசித்து உண்டால், உண்பது ருசிக்கும் நமக்கு.
5. பசித்து உண்டால், நோயில்லை நமக்கு.
6. தேவைக்கு உண்டால், போர் வில்லை நமக்கு.
7. சிரித்து உண்டால், சோகம் இல்லை நமக்கு.
8. நேரத்தோடு உறங்கினால், உற்சாகமணம் நமக்கு.
9. உண்ணும் போது குடிநீர் தவித்தால், அஜீரணம் இல்லை நமக்கு.
10. வரும்போது கழிந்தால், மலச்சிக்கல் இல்லை நமக்கு.
11. கண்ட உணவு தவிர்த்தால், கவலை இல்லை நமக்கு.
12. நம் நாவே நம்பிக்கைக்குரிய மருத்துவர் நமக்கு.
13. நம் உடலில் இலவச மருத்துவமனை நமக்கு.
14. நம் புரிதலே மருந்தில்லா மருத்துவம் நமக்கு.
15. நம் நம்பிக்கையே நோயில்லா பலம் நமக்கு.




