உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில், கடந்த 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்த இளம்பெண், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது காதலனை திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு ஓடிப்போன அஞ்சலி (24) என்பவர், மாமியார் வீட்டில் நேற்று தற்கொலை செய்தார். அஞ்சலியின் கணவர் ராஜேஷ் இ-ரிக்ஷா ஓட்டிவரும் நிலையில், வரதட்சணைக்காக கொலை செய்ததாக அஞ்சலியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.




