திருமணத்தில் மூன்று முடிச்சு
போடுவது ஏன்?
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் ஆகும். ஒரு திருமணத்தில் ஆயிரம் ஆயிரம் சடங்குகள் இருந்தாலும் அதில் தாலி கட்டுவதற்கு தான் அதிக முக்கியத்துவம் உள்ளது. இதனை மாங்கல்ய தாரணம் என்று கூறுவர். திருமணத்தின் போது மணமகன், மணமகளின் கழுத்தில் திருமாங்கல்ய சரடை கொண்டு மூன்று முடிச்சு போடுகின்றனர். இந்த மூன்று முடிச்சுகளும் ஒரு பெண் எப்போதும் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மைமிக்கவளாக திகழ வேண்டும் என எத்தனையோ காரணங்களை உணர்த்துகின்றது.
முதல் முடிச்சு :
இறைவன் மற்றும் தேவர்களை சாட்சியாக வைத்து போடப்படுவது முதல் முடிச்சு ஆகும். இது கணவனுக்கு கட்டுப்பட்டவளாக இருக்க போடப்படுகிறது.
இரண்டாம் முடிச்சு :
இரண்டாம் முடிச்சு முன்னோர்களை சாட்சியாக கொண்டு போடப்படுகிறது. இது தாய் தந்தையருக்கும், புகுந்த வீட்டிற்கும் கட்டுப்பட்டவளாக இருக்க போடப்படுகிறது.
மூன்றாம் முடிச்சு :
பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு வந்திருப்பவர்களின் சாட்சியாக போடப்படுவது மூன்றாவது முடிச்சு ஆகும். இது தெய்வத்திற்கு பயந்தவளாக இருக்க போடப்படுகிறது.




