கேரளா: கண்ணூர் கண்ணபுரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது இன்று காலை பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், 2 பேர் உடல் சிதறி பலியாகினர். வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தகவல் கிடைத்ததும் கண்ணபுரம் போலீசாரும், தளிப்பரம்பாவைச் சேர்ந்த தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்தவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.




