கொண்டவள் தரா இன்பத்தை
வந்தவள் தந்திட
இன்புற்றிருந்தேன்
தேக சுகத்தின் தீரா ஆசைகள்
தீர்வுக்குள்ளாகிட
ஆறா காதலுக்குள்ளானேன்
அவளே இனி எல்லாம்
என் வாழ்விலே என
கொண்டவளை மறந்திருந்தேன்
வந்தவளோ ஓடும்
நதியாய் என் போல்
பலருக்கு பந்தி விரிப்பதை
அறிந்ததுமே
உணர்ந்து கொண்டேன்
நம்பிக்கை துரோகத்தின்
வலி எதுவென்று
வலி தந்தவன் இன்று
மருந்தாகி போனேன்
எது வாயினும்
இனி நான் படி தாண்டேன் என்றே
நான் செய்த துரோகத்திற்கு
பரிகாரமாய்..
கொண்டவள் காலில்…




