பெண்களே இது உங்களுக்கான ஆன்மீக குறிப்புகள்..!! இதை ஒரு பொழுதும் கடைபிடிக்க மறந்து விடாதீர்கள்..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே ஆன்மீக ரீதியாக இதை எல்லாம் பெண்கள் இப்படி தான் செய்ய வேண்டும் என்று வரைமுறை ஒன்று உள்ளது. எடுத்துக்காட்டாக, அம்மாவாசை , தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது. இது மாதிரி நிறைய பயனுள்ள ஆன்மீகத் தகவல்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கோலமிடும்போது பெண்கள் தெற்கே பார்த்து நின்று கொண்டு கோலமிட கூடாது. கர்ப்பமான பெண்கள் உக்கிர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு சென்று விடாதீர்கள். மீறி சென்றால் பல சிரமங்களுக்கு ஆளாவீர்கள். கோவில்களில் பிரசாதமாக தரும் துளசியை தலையில் ஒருபோதும் வைத்துக் கொள்ளாதீர்கள். பெண்கள் புடவை கட்டும் போது எப்போதும் முந்தானையை தொங்கவிட்டு ஒருபோதும் நடக்கக்கூடாது. இது போன்ற பல செய்திகளை ஆன்மீகம் செல்கிறது. அதே போல் தான் பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை உச்சியில் வைத்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுது தலையை விரித்து போட்டு பூஜை செய்யக்கூடாது. இதுபோன்ற பல ஆன்மீகத் தகவல்களை அறிந்து கொண்டு அதன்படி நாம் நடப்பதன் மூலம் நாம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.




