மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ற சம்பளம் கேளுங்கள் என நடிகை பிரியாமணி அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “உங்கள் மார்க்கெட் நிலவரம் எதுவாக இருந்தாலும், அதற்குரிய சம்பளத்தை தைரியமாக கேட்க வேண்டும். எனக்கு குறைந்த சம்பளம் கிடைத்த காலமும் உண்டு. ஆனால், அது தன்னை பாதிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், அனைவரும் அவரவருக்கு ஏற்ற தகுதியான சம்பளத்தை கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.




